நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த பாண்டமங்கலம் பகுதியில், வீடு வீடாக சென்று தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக, ப.வேலூர் போலீஸாருக்கு தகவல் வந்தது.
இன்ஸ்பெக்டர் பூபால் தலைமையிலான போலீஸார், சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (35) என்பவர், வீடு வீடாக சென்று தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.