/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முத்தாயம்மாள் பாலிடெக்னிக் மாநில அளவிலான கருத்தரங்கு
/
முத்தாயம்மாள் பாலிடெக்னிக் மாநில அளவிலான கருத்தரங்கு
முத்தாயம்மாள் பாலிடெக்னிக் மாநில அளவிலான கருத்தரங்கு
முத்தாயம்மாள் பாலிடெக்னிக் மாநில அளவிலான கருத்தரங்கு
ADDED : செப் 03, 2011 12:50 AM
ராசிபுரம்: ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், 'எம்.பி.டி., பிஸ்ட்-2011' என்ற தலைப்பில், மாநில அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு நடந்தது.
கல்லூரி முதல்வர் விஜயகுமார் தலைமை வகித்தார். கட்டிடவியல் துறைத்தலைவர் ஜெகன் வரவேற்றார். கல்லூரிச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். கல்வி அறக்கட்டளைத் தலைவர் ராமசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கருத்தரங்கில், மாநிலத்தில் இருந்து பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
தொடர்ந்து நடந்த நிறைவு விழாவில், மின்னணுவியல் துறைத் தலைவர் சாந்தி வரவேற்றார். பவானிசாகர் அணை பவர் ஹவுஸ் உதவி செயற்பொறியாளர் முருகேசன் பங்கேற்று, தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக் குறித்து விளக்கி பேசினார். கருத்தரங்கில், தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆய்வு கட்டுரைக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.