/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
/
மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 27, 2011 12:30 AM
ராசிபுரம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சர்வீஸ் தொண்டு நிறுனத்துடன் இணைந்து, மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி, ராசிபுரத்தில் நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவி தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் மாங்கனி முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் சந்திரசேகரன் பேரணியை துவக்கி வைத்தார். அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிந்தது.
பேரணியில், மாற்றுதிறனுடைய மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்தும், அவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய சலுகைகள், நலத்திட்டங்கள் பற்றியும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், சிறப்பாசிரியர்கள் ஸ்ரீதேவி, பிரேமா, இந்திராணி, மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாற்றுதிறனாளிகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சியும் அளிக்கப்பட்டது.
எலச்சிபாளையம் வட்டார வள மையம் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணி, மணலி ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், இளநகர் புனித தெரசாள் நடுநிலைப்பள்ளியிலும் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் மலர்விழி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் பேரணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தலைமையாசிரியர்கள் கவுசல்யா, அந்தோணிசாமி, ஆசிரியர் பயிற்றுனர் சுடர்மணி, சிறப்பாசிரியர்கள் சரோஜா, பெரியசாமி, மணிமாதேஸ் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.