/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் குண்டும், குழியால் அவதி
/
நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் குண்டும், குழியால் அவதி
ADDED : மே 28, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல் : நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் மினி பஸ், டவுன் பஸ், மப்சல் பஸ் என, தினமும், 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சேலம் பஸ்கள் நிற்கும் பகுதியிலும், ஈரோடு, திருச்சி பஸ்கள் நிற்கும் பகுதியிலும் உள்ள தரைத்தளம், தற்போது பெய்த மழைக்கு குண்டும், குழியுமாக மாறி உள்ளது.இதனால், பஸ் டிரைவர்கள், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, குண்டும், குழியுமாக மாறியுள்ள பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை பேஜ் ஒர்க் செய்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.