/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் நகர பா.ஜ., தலைவர் தேர்வு
/
நாமக்கல் நகர பா.ஜ., தலைவர் தேர்வு
ADDED : டிச 28, 2024 02:10 AM
நாமக்கல்: -பா.ஜ., கட்சியின் நாமக்கல் நகர தலைவராக தினேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும், பா.ஜ., அமைப்பு தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது.
அந்த வகையில், முதல் கட்டமாக, நகர, ஒன்றிய அளவில் புதிய நிர்வாகிகள் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்-பட்டு வருகின்றனர். நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம் நகர புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, நாமக்கல் நகர பொதுச்செயலாளரான தினேஷ், நாமக்கல் நகர தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை தவிர, ராசிபுரம் நகர தலைவராக வேல்முருகன், புதுச்சத்திரம் ஒன்-றிய தலைவர் செல்வம், நாமக்கல் ஒன்றியம் மகேஸ்வரி, மோகனுார் கிழக்கு ஒன்றியம் செல்வமணி, வெண்ணந்துார் திவ்யா, ராசிபுரம் ஒன்றியம் ராஜேந்திரன், நாமகிரிப்பேட்டை கிழக்கு கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் நகர பா.ஜ., தலைவர் தினேஷூக்கு, முன்னாள் நகர தலைவர் சர-வணன், கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, சேதுராமன் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.