/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
/
நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
ADDED : ஆக 15, 2024 06:53 AM
நாமக்கல்: நாமக்கல் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி, முதல்வர் ஸ்டாலின், கடந்த, 12ல் அரசாணை மற்றும் அரசிதழை வெளியிட்டார்.
இதையடுத்து, தஞ்சை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய மகேஸ்வரி, நாமக்கல் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று, பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர், திண்டுக்கல், கடலுார் மாநகராட்சி கமிஷனராகவும், நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு நகராட்சி கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற மகேஸ்வரியை, மாமன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.