/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தனி லோகோ வெளியீடு
/
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தனி லோகோ வெளியீடு
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தனி லோகோ வெளியீடு
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தனி லோகோ வெளியீடு
ADDED : ஜூன் 25, 2025 01:26 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுலகத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் லச்சினை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் உமா வெளியிட, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பெற்றுக்கொண்டார்.
அப்போது, எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டம், 1997ல், இரண்டு வருவாய் கோட்டங்கள், எட்டு
வட்டங்கள், 30 வருவாய் பிர்க்காக்களுடன் உருவாக்கப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள் தொகை, 17 லட்சத்து, 26,601 பேர். 169 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட, பிற செயற்
பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சங்கங்களையும் சேர்த்து மொத்தம், 816 சங்கங்கள் உள்ளன. மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று, முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை, 2024 மார்ச், 7ல், உருவாக்கி அரசாணை
வெளியிட்டார்.
தொடர்ந்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான, வேளாண், கோழப்பண்ணை, முட்டை போன்ற தொழில்களை உள்ளடக்கி, நாமக்கல் மலைக்கோட்டையை கொண்டு உருவாக்கப்பட்ட புதிய லச்சினையை கலெக்டர் உமா வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், டி.ஆர்.ஓ., சுமன், தனி டி.ஆர்.ஓ., சரவணன், அரசுத்துறை அலுவல்ரகள் உள்பட பலர் பங்கேற்றனர்.