/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பல்கலை அளவிலான கோகோ பாவை இன்ஜி., கல்லூரி சாதனை
/
பல்கலை அளவிலான கோகோ பாவை இன்ஜி., கல்லூரி சாதனை
ADDED : செப் 25, 2011 12:46 AM
ராசிபுரம்: பல்கலை அளவிலான கோ-கோ போட்டியில், பாவை இன்ஜினியரிங் கல்லூரி மாணவியர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இடையேயான கோ-கோ போட்டி, ராசிபுரம் பாவை இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது. 'நாக்-அவுட்' முறையில் நடந்த இப்போட்டியில், 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. பாவை கல்வி நிறுவன தலைவர் ஆடிட்டர் நடராஜன் போட்டியை துவக்கி வைத்தார். இறுதிப்போட்டியில், பெண்கள் பிரிவில் பாவை இன்ஜினியரிங் கல்லூரி அணியும், நாமக்கல் கிங் இன்ஜினியரிங் கல்லூரி அணியும் விளையாடியது.
அதில், 20:4 என்ற புள்ளி கணக்கில், பாவை கல்லூரி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. நாமக்கல் கிங் இன்ஜினியரிங் கல்லூரி இரண்டாமிடமும், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., டெக்னாலஜி கல்லூரி அணி மூன்றாமிடமும், கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி அணி நான்காமிடமும் பெற்றது. ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில், சேலம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி அணியும், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்லூரி அணியும் விளையாடின. அதில், 14:13 என்ற புள்ளிக் கணக்கில், சேலம் கல்லூரி அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. கே.எஸ்.ஆர்., கல்லூரி இரண்டாமிடம், கோவை வி.எல்.பி., கல்லூரி அணி மூன்றாமிடம், ராசிபுரம் பாவை கல்லூரி அணி நான்காமிடம் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.