/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'நான் முதல்வன்' திட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை நாமக்கல் மாவட்டம் 2வது முறையாக முதலிடம்
/
'நான் முதல்வன்' திட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை நாமக்கல் மாவட்டம் 2வது முறையாக முதலிடம்
'நான் முதல்வன்' திட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை நாமக்கல் மாவட்டம் 2வது முறையாக முதலிடம்
'நான் முதல்வன்' திட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை நாமக்கல் மாவட்டம் 2வது முறையாக முதலிடம்
ADDED : ஜூன் 12, 2025 01:52 AM
நாமக்கல், 'நான் முதல்வன்' திட்டம் மூலம், பிளஸ் 2 மாணவர்களை உயர்கல்வியில் சேர்த்ததில், நாமக்கல் மாவட்டம், இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில், உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை, 51ல் இருந்து, 100 சதவீதமாக உயர்த்துவதை நோக்கமாக கொண்டு, 2022 மார்ச்சில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித்துறைகளின் கூட்டுமுயற்சியுடன், 'நான் முதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம், மாணவர்களிடையே பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகள் பற்றிய தீவிர விழிப்புணர்வை உருவாக்கி, அவர்கள் தேர்வுகளை மேற்கொள்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும், உயர்கல்வி பயில, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும், 'புதுமைப்பெண்' திட்டம் மூலம், அனைத்து அரசு பள்ளி மாணவர்களையும், உயர்கல்வியில் சேர்ப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
'நான் முதல்வன்' திட்டம் மூலம், பிளஸ் 2 மாணவர்களை உயர்கல்வியில் சேர்த்ததில், நாமக்கல் மாவட்டம், இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. 2022-23ல், 8,678 மாணவ, மாணவியர், 2023-24ல், 8,801 மாணவ, மாணவியர், 'நான் முதல்வன்' திட்டம் மூலம் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். 2024-25ம் கல்வியாண்டில், பிளஸ் 2 படித்த மாணவர்களில், மாற்றுத்திறனாளி மாணவர்கள், நலப்பள்ளி மாணவர்கள், ஒற்றை பெற்றோர் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகள், அரையாண்டு தேர்வுகளில் கலந்துகொள்ளாத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள், உயர்கல்விக்கு செல்லாதவர்கள், பள்ளி இடைநின்ற மாணவர்கள் என சிறப்பு கவனம் தேவைப்படும் அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து, இந்தாண்டு 'கல்லுாரி கனவு' உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது.
'கல்லுாரி கனவு' நிகழ்ச்சியில் மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், துணை மருத்துவ படிப்புகள், கலை அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி பிரிவுகள் சார்ந்து துறை வல்லுனர்களால் விளக்கப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.