ADDED : ஏப் 02, 2024 04:41 AM
பட்டுக்கூடு 84 கிலோ
ரூ.31,000க்கு விற்பனை
ராசிபுரம்: ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். அதிகபட்சம் கிலோ, 410 ரூபாய், குறைந்தபட்சம், 320 ரூபாய், சராசரி, 376.31 ரூபாய் என, 83.750 கிலோ பட்டு கூடு, 31,000 ரூபாய்க்கு விற்பனையானது.
கண்டிபுதுார் அரசு பள்ளிக்குஜெராக்ஸ் மிஷின் வழங்கல்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கண்டிபுதுார் பகுதியில் நகராட்சி துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளிக்கு, 22,000 ரூபாய் மதிப்புள்ள ஜெராக்ஸ் மிஷின், பழுதான குடிநீர் இயந்திரத்தை சரி செய்ய, 15,000 ரூபாயை, முன்னாள் மாணவர்கள் சார்பில், நேற்று, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார், ஆசிரியர்களிடம் வழங்கினர். முன்னாள் மாணவர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ரூ.11 லட்சத்திற்குபருத்தி வர்த்தகம்
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையத்தில், ஆர்.சி.எம்.எஸ்., சார்பில் வாரந்தோறும் திங்கட்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில், ஆர்.சி.எச்., ரகம், 100 கிலோ மூட்டை அதிகபட்சம், 8,469 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 7,119 ரூபாய்க்கும்; கொட்டு ரகம் அதிகபட்சம், 5,555 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 4,295 ரூபாய்க்கும் விற்பனையானது. டி.சி.எச்., பருத்தி, விற்பனைக்கு வரவில்லை. நேற்று ஒரே நாளில், ஆர்.சி.எச்., 498, கொட்டு ரகம், 14, என, 512 மூட்டை பருத்தி, 11 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
சாலை விபத்தில்எல்.ஐ.சி., முகவர் பலி
எலச்சிபாளையம்-
எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமம், நல்லையன்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் கோபால், 43; எல்.ஐ.சி., முகவர். இவர், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் பணியை முடித்துவிட்டு, 'ஸ்பிளண்டர் பிளஸ்' டூவீலரில் வையப்பமலையில் இருந்து, கொன்னையார் நோக்கி சென்றுள்ளார். கட்டிபாளையம் அடுத்த மரப்பரை பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த, 'அசோக் லேலேண்ட்' டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த, கோபாலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, நள்ளிரவு, 12:00 மணிக்கு உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பவித்திரம் ஆட்டு சந்தையில்
ரூ.40 லட்சத்திற்கு வர்த்தகம்
எருமப்பட்டி: செவ்வந்திப்பட்டி, பவித்திரம் ஆட்டுச்சந் தைக்கு வரத்து குறைந்ததால், 40 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே ஆடுகள் வர்த்தகமாகின.
எருமப்பட்டி யூனியனில் பவித்திரம், செவ்வந் திப்பட்டி பஞ்.,ல் வாரந்தோறும் திங்கட்கிழமையில் ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த வாரச்சந்தைக்கு கஸ்துாரிப்பட்டி, நவலடிப்பட்டி, தொட்டியம், உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தேர்தல் கெடுபிடியால், நேற்று நடந்த ஆட்டுச்சந்தைக்கு குறைந்த அளவிலேயே, ஆடுகளை வியாபாரிகள் விற் பனைக்கு கொண்டு வந்தனர். இதனால், 40 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

