/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமுள்ள மாவட்டம் நாமக்கல்: பிரேமலதா வேதனை
/
தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமுள்ள மாவட்டம் நாமக்கல்: பிரேமலதா வேதனை
தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமுள்ள மாவட்டம் நாமக்கல்: பிரேமலதா வேதனை
தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமுள்ள மாவட்டம் நாமக்கல்: பிரேமலதா வேதனை
ADDED : மே 22, 2025 01:59 AM
நாமக்கல், ''தமிழகத்தில், இளம் விதவைகள் அதிகமுள்ள மாவட்டமாக, நாமக்கல் இருப்பது மிகவும் மன வேதனையளிக்கிறது,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேசினார்.
தே.மு.தி.க., கொள்கை விளக்க பொதுக்கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். துணை செயலாளர் சுபா முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியதாவது:
தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் கொடுக்கின்றோம் எனக்கூறி, மக்கள் வரி பணத்திலேயே, 1,000 ரூபாய் கொடுத்து, தமிழகத்தை கடனாளியாக்கிவிட்டனர். தமிழகத்தில் அதிகமான இளம் விதவைகள் இருக்கின்ற மாவட்டமாக, நாமக்கல் இருப்பதை மிகவும் மன வேதனையுடன் பதிய வைக்கிறேன். டாஸ்மாக்கை ஒழிப்போம் என்று ஆட்சிக்கு வருவதற்கு முன் கூறினர். ஆனால், இதுவரை ஒரு டாஸ்மாக் கடையை கூட மூடவில்லை.
'நீட்' தேர்வு ஒழிக்கப்படும். முதல் கையெழுத்தே, 'நீட்' தேர்வுக்கு தான், எனக்கூறி ஆட்சிக்கு வந்தனர். ஆனால், அந்த தேர்வை கொண்டு வந்ததே, இந்த மாவட்டத்தில் உள்ள முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காந்திச்செல்வன் தான். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும், 'நீட்' தேர்வை ஏற்றுக்கொண்டன. தமிழகம் மட்டும் தான் அதை வைத்து அரசியல் செய்து வருகிறது. 'நீட்' தேர்வை யாரும் ஒழிக்க முடியாது.
கனிமொழி எம்.பி., தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக இருப்பதாக கூறினார். ஆனால், தற்போது, இரண்டு புதிய மதுபான ஆலைகளை தொடங்கியுள்ளார். தற்போது விவாகரத்து அதிகரித்து வருகிறது. கணவன், -மனைவி இடையே புரிதல் இருந்தால் விவாகரத்து நடக்காது. வரும், 2026 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., மக்கள் ஆதரவுடன் மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.