/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் குறிஞ்சி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்
/
நாமக்கல் குறிஞ்சி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்
நாமக்கல் குறிஞ்சி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்
நாமக்கல் குறிஞ்சி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்
ADDED : மே 07, 2024 07:28 AM
நாமக்கல் : நாமக்கல் காவேட்டிபட்டியில், 25 ஆண்டுகளுக்கு மேலாக குறிஞ்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.
பல டாக்டர்களை உருவாக்கிய இப்பள்ளியில், தற்போது பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவி சானியா, அறிவியல் பாடப்பிரிவில், 600க்கு, 593 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். இதேபோல், மாணவி ஸ்ரீலேகா, மாணவர் நிதிஷ் ஆகியோர், 600க்கு, 584 மதிப்பெண் பெற்று 2ம் இடம், மாணவன் நிஷாந்த், 600க்கு, 581 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடம், மாணவன் தினேஷ், கைலாஷ், சந்தியா ஆகியோர், 600க்கு, 580 மதிப்பெண் பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் இவர்களை பள்ளி தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர். தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆகியோர் பாராட்டினர்.