/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மல்லசமுத்திரம் பகுதியில்போஸ்டரால் பரபரப்பு
/
மல்லசமுத்திரம் பகுதியில்போஸ்டரால் பரபரப்பு
ADDED : செப் 19, 2011 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: திருச்செங்காடு தாலுகா, மல்லசமுத்திரத்தில், உள்ளாட்சி
தேர்தல் எதிரொலியாக, ஊழல் விபரம் குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால்,
பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மல்லசமுத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார
பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், 'மாற்றம் தேவை, ரூபாய் ஒருகோடி
எங்கே, வாக்காள பெருமக்களே சிந்திப்பீர். நாம் தொடர்ந்து, 15 ஆண்டுகாலம்
ஆதரவு அளித்ததில் பயன் அடைந்தவர்கள் யார்' என்பது உள்ளிட்ட பல வாசகங்கள்
அதில் இருந்தன.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், திடீரென ஒட்டப்பட்டுள்ள
இந்த போஸ்டரால், மல்லசமுத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.