/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டவுன் பஞ்., கவுன்சிலர்போட்டியின்றி தேர்வு செய்ய ரூ.2 லட்சத்துக்கு ஒப்பந்தம்

ADDED : செப் 22, 2011 02:28 AM
ராசிபுரம்: பட்டணம் டவுன் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் பதவிக்கு, எவ்வித
போட்டியும் இன்றி இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு, பத்திரம்
எழுதித்தரப்பட்டுள்ளது.ராசிபுரம் அடுத்த பட்டணம் டவுன் பஞ்சாயத்தில், 15
வார்டுகள் உள்ளன. தற்போது, டவுன் பஞ்சாயத்து சேர்மனாக அ.தி.மு.க.,வை
சேர்ந்த வேலப்பன் பொறுப்பு வகித்து வருகிறார். இப்பஞ்சாயத்தின், 11வது
வார்டு தாழ்த்தப்பட்ட பெண் உறுப்பினர் வார்டாக ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த
வார்டுக்கு, பட்டணம் டவுன் பஞ்சாயத்து தே.மு.தி.க., நகர செயலாளர்
குழந்தைவேலின் மனைவி ஜீவாவை போட்டியின்றி தேர்வு செய்ய ஏற்பாடு
செய்யப்பட்டது.
அதன்படி, அப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள் முன்னிலையில்
பஞ்சாயத்து பேசப்பட்டது.அதில், ஜீவாவை போட்டியின்றி கவுன்சிலராக்க வேண்டும்
என்றும், அதற்கு இரண்டு லட்சம் ரூபாய் அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு
நிதி அளிப்பது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஊர் பெரியவர்கள்
தரப்பிலும், குழந்தைவேல் தரப்பிலும் 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம்
எழுதிக் கொள்ளப்பட்டது.தேர்தல் தேதி அறிவிக்கப்ட்டு, மனு தாக்கல்
செய்தவுடன் மாரியம்மன் கோவிலுக்கு நிதி அளிப்பது என, முடிவு செய்யப்பட்டது.
குழந்தைவேல் மணல், ஜல்லி, லாரி டிரைவராகவும், கமிஷன் ஏஜன்டாகவும்
செயல்பட்டு வருகிறார்.