/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதன்சந்தைக்குமாடு வரத்து குறைவு
/
புதன்சந்தைக்குமாடு வரத்து குறைவு
ADDED : செப் 22, 2011 02:29 AM
நாமக்கல்:பிரசித்தி பெற்ற புதன் சந்தை மாட்டுச் சந்ததைக்கு, மாடுகள் வரத்து
குறைந்துள்ளது.நாமக்கல் புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய், புதன்
கிழமையில் மாட்டுச் சந்தை நடைபெறும்.
இரு தினங்கள் நடக்கும் மாட்டுச்
சந்தைக்கு, நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, சேலம், துறையூர் உள்ளிட்ட
மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.தமிழகம்
மட்டுமின்றி, கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த ஏராளமானோர், அம்மாடுகளை வாங்கிச்
செல்கின்றனர். முதல் நாள் எருமைக் கிடாவும், இரண்டாம் நாள் காளை மாட்டு
சந்தையும் நடைபெறும். மாட்டுச்சந்தைக்கு வரும் மாடுக்கு, டவுன் பஞ்சாயத்து
அலுவலகம் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக
புதன்சந்தைக்கு மாடுகளின் வரத்து குறையத் துவங்கியுள்ளது. பல்வேறு
இடங்களில் மாட்டுச்சந்தை உருவாகியிருப்பது, மாடு வளர்ப்பு குறையத்
துவங்கியிருப்பது இதற்கு முக்கிய காரணமாக, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாடுகளின் வரத்து குறைவு காரணமாக, அதைச் சார்ந்த தொழில்களும் பாதிக்கும்
நிலை உருவாகியுள்ளது. மாட்டுச்சந்தையை பழையபடி செயல்படுத்த டவுன்
பஞ்சாயத்து நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.