sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் சிலவரி செய்திகள்

/

நாமக்கல் சிலவரி செய்திகள்

நாமக்கல் சிலவரி செய்திகள்

நாமக்கல் சிலவரி செய்திகள்


ADDED : ஜூன் 25, 2024 02:43 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழீஸ்வரர் கோவிலில்

சத்தாபரண நிகழ்ச்சி

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், 1,000 ஆண்டு பழமைவாய்ந்த சோழீஸ்வரர், அழகுராய பெருமாள், செல்லாண்டியம்ன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆனி மூல நட்சத்திரத்தன்று, தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், கடந்த, 15ல் கொடியேற்றம் நடந்தது.

ஆனி மூல நட்சத்திர தினமான, கடந்த, 22ல் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை பக்தர்கள் நான்கு ரத வீதி வழியாக வடம்பிடித்து இழுத்து சென்று, கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு சத்தாபரணதேர் உற்சவம், சிறப்பு வாணவேடிக்கை, வசந்த உற்சவம், மஞ்சள் நீராடல், ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் திருவிழா நிறைவடைந்தது. மூலவர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல், உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பிகா உடனமர் சோழீஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகு

சவுந்தரராஜ பெருமாள் சுவாமிகள் சிறப்பு தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சாலையை கடக்க முயன்ற

முதியவர் கார் மோதி பலி

குமாரபாளையம், ஜூன் 25-

குமாரபாளையம், விட்டலபுரியை சேர்ந்தவர் சோமசுந்தரம், 75; வாட்ச்மேன். இவர், சேலம் - கோவை புறவழிச்சாலை, வட்டமலை பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் நடந்தபடி சாலையை கடக்க முயன்றார். அப்போது, சேலத்திலிருந்து அதிவேகமாக வந்த, 'பொலீரோ' கார், முதியவர் மீது மோதியது. இதில், பலத்த அடிபட்டு, சோமசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி, விபத்துக்கு காரணமான கார் டிரைவர், பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த சக்தி, 39, என்பவரை கைது செய்தனர்.

ரூ.3.15 லட்சத்துக்கு

பட்டுக்கூடு ஏலம்

ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 683.45 கிலோ விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 520 ரூபாய், குறைந்தபட்சம், 301 ரூபாய், சராசரி, 461.54 ரூபாய் என, 3.15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

கோடை சீசன் முடிந்து, 2 மாதங்களுக்கு பின், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தான், மீண்டும் பட்டுக்கூடு ஏலம் நடந்தது. ஆரம்ப நாளில், 30,000, 40,000 என, விற்பனையானாலும், நேற்று விற்பனை, 3 லட்சம் ரூபாயை தாண்டியது. பட்டுக்கூடு விலையும், 500 ரூபாயை தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தக்காளி கிலோ ரூ.70

ராசிபுரம்-

தொடர் மழையால், ராசிபுரம் உழவர் சந்தை யில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, நேற்று கிலோ, 70 ரூபாயக்கு விற்பனையானது. கடந்த வாரம், 50க்கு விற்பனையான தக்காளி ஒரே வாரத்தில் கிலோவிற்கு, 20 ரூபாய் உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ, 70, கத்தரி, 50, வெண்டை, 40, புடலை, 40, பீர்க்கன்காய், 60, பாகல், 70, சுரைக்காய், 15, பச்சை மிளகாய், 60, சின்ன வெங்காயம், 60, பெரிய வெங்காயம், 48, உருளை, 50, கேரட், 70, பீட்ரூட், 60, பீன்ஸ், 110, முட்டைகோஸ், 45 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று ஒரே நாளில், 143 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 12,340 கிலோ காய்கறி, 3,960 கிலோ பழங்கள், 170 கிலோ பூக்கள் என மொத்தம், 16,470 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகியுள்ளது. இதன் மொத்த மதிப்பு, 7,30,035 ரூபாய் ஆகும். 3,290 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.






      Dinamalar
      Follow us