sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் சிலவரி செய்திகள்

/

நாமக்கல் சிலவரி செய்திகள்

நாமக்கல் சிலவரி செய்திகள்

நாமக்கல் சிலவரி செய்திகள்


ADDED : ஜூலை 01, 2024 04:00 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹிந்து கோவில் சூறை

காஷ்மீரில் 12 பேர் கைது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின், ரியாசி மாவட்டம், தர்மாரி பகுதியில் ஹிந்து கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று முன் தினம் புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகள் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்களை அடித்து நொறுக்கி சென்றனர்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் கூட்டாக இணைந்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். முக்கிய சாலைகளில் டயர்களை எரித்து மறியலில் ஈடுபட்டனர். நிலைமை மோசமானதால், ரியாசி துணை கமிஷனர் நேரில் வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினார். பின், அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, 12 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

-

கொல்லிமலை அருவியில்குவிந்த சுற்றுலா பயணிகள்

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, சனி, ஞாயிற்றுக்கிழமை நாட்களில், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த மாதம், கொல்லிமலையில் பெய்த கன மழையால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி ஆகியவைகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால், நேற்றும், நேற்று முன்தினமும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து, அரப்பளீஸ்வரர், எட்டிக்கையம்மன் உள்ளிட்ட கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த, 3 மாதமாக கொல்லிமலையில் போதிய மழையில்லாமல் அருவிகள் வரண்டிருந்த நிலையில், தற்போது பெய்த மழையால், கடந்த, 4 வாரமாக கொல்லிமலையில் சீசன் களை கட்டியுள்ளது.

டூவீலர் குறுக்கே பாய்ந்த நாயால்தடுமாறி விழுந்த வாலிபர் பலி

மோகனுார்: டூவீலரின் குறுக்கே பாய்ந்த நாயால், நிலைதடுமாறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், மணச்சநல்லுார், கல்பாளையம் நடுத்தெருவை சேர்ந்த பிச்சைமணி மகன் விவேக், 22. டிப்ளமோ படித்துவிட்டு, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வளையப்பட்டியில் உள்ள தன் மாமா பாலமுருகன் வீட்டு இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, கடந்த, 11ல் வந்துள்ளார். அன்று இரவு, 7:00 மணிக்கு, ஸ்பிளண்டர் பைக்கிள், நாமக்கல் சென்று மாலை வாங்கிக் கொண்டு, வளையப்பட்டிக்கு திரும்பினார்.

அப்போது, மின் வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, தெருநாய் ஒன்று டூவீலரின் குறுக்கே பாய்ந்தது. அதில், நிலைதடுமாறிய விவேக் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு விவேக் உயிரிழந்தார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us