sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் சிலவரி செய்திகள்

/

நாமக்கல் சிலவரி செய்திகள்

நாமக்கல் சிலவரி செய்திகள்

நாமக்கல் சிலவரி செய்திகள்


ADDED : பிப் 06, 2025 05:33 AM

Google News

ADDED : பிப் 06, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில் திருவிழாவில் அம்மன்

வேடமிட்டு வலம் வந்த கலைஞர்கள்

பள்ளிப்பாளையம்: வெடியரசம்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில், தேரில் சாமி வலம் வருவதை போல, நடன கலைஞர்கள் அம்மன் வேடமிட்டு வலம் வந்தனர்.

பள்ளிப்பாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி கோவில் அருகில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி ஆடிய நடன கலைஞர்கள் இருவர் அம்மன் வேடமிட்டு, ஒருவர் மேல் ஒருவர் நின்று கொண்டு பொதுமக்கள் மத்தியில் வலம் வந்தனர். இன்று பொங்கல் வைக்கும் விழா நடக்கிறது.

பொது வினியோக செயல்பாடுநாமக்கல் கலெக்டருக்கு பாராட்டு

நாமக்கல்,: மாநில அளவில், பொது வினியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயல்பாடுகளில், நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வுக்

கமிட்டியினர், கலெக்டர் உமாவை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து, கேடயம் வழங்கினர்.

கமிட்டியின் தலைவர் வக்கீல் செல்வம், பொதுச் செயலாளர் இக்பால், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சரவணன், துணைத் தலைவர்கள் அசோகமித்ரன் உள்ளிட்டோர், கலெக்டருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இன்று மருத்துவ முகாம்

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் வட்டாரவளமைய மேற்பார்வையாளர் மகாலிங்கம் வெளியிட்ட அறிக்கை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ளடங்கிய கல்வித்திட்டம் சார்பில், எலச்சிபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 9:15 மணிமுதல் மதியம், 1:00 மணி வரை மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடக்க உள்ளது.

இம்முகாமில், கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு, மனநலம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவர்கள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 18 வயதுவரை உள்ள மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கோடைக்கு முன்பே

விற்பனைக்கு வந்த தர்பூசணி

வெண்ணந்தூர், பிப். 6-

வெப்பத்தை தணிக்கும் வகையில் இளநீர், பழச்சாறு, நுங்கு, மோர் போன்றவற்றை கோடையில் அருந்தி மக்கள் தாகத்தையும், உடல் வறட்சியையும் தணித்துக் கொள்வர்.

இதில் தர்பூசணி உடலை சீரான வெப்பத்தில் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. இந்த தர்பூசணி விற்பனை கோடை துவங்கும் முன்பே வெண்ணந்தூர் மற்றும் வெள்ள பிள்ளையார் கோவில், அத்தனுார், சித்தர் கோவில் வனப்பகுதி, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை போன்ற பகுதியில் துவங்கியுள்ளது. கிலோ, 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்களை தடுக்க ஆலோசனை

ப.வேலுார்-

ப.வேலுார் நகர வர்த்தக சங்க மண்டபத்தில், ப.வேலுார் தாசில்தார் முத்துக்குமார் தலைமையில் தடை செய்யப்பட்ட பொருட்களை தடுப்பதற்காக, வணிகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ப.வேலுார் தாசில்தார் முத்துக்குமார் தலைமை தாங்கினார்.

ப.வேலுார் நகர அனைத்து வர்த்தக சங்கத் தலைவர் சுந்தரம், எஸ்.ஐ., சீனிவாசன், உணவு பாதுகாப்பு அலுவலர் லோகநாதன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் குணசேகரன், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து துப்புரவு மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன், ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us