/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டி நாமக்கல் தெற்கு அரசு பள்ளி சாதனை
/
மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டி நாமக்கல் தெற்கு அரசு பள்ளி சாதனை
மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டி நாமக்கல் தெற்கு அரசு பள்ளி சாதனை
மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டி நாமக்கல் தெற்கு அரசு பள்ளி சாதனை
ADDED : நவ 25, 2024 03:13 AM
நாமக்கல்: மாவட்ட அளவிலான, சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையேயான, 'கிரிடா பாரதி' கூடைப்பந்து போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 19 வய-துக்கு உட்பட்டோர் போட்டியில், மாணவர் பிரிவில், சைதன்யா சி.பி.எஸ்.இ., ரெட்டிப்பட்டி பாரதி மெட்ரிக், திருச்செங்கோடு எஸ்.பி.கே., மெட்ரிக், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி அணிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில், எஸ்.பி.கே., பள்ளியும், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி அணியும் விளையாடின. அதில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் பள்ளி வெற்றி பெற்று சாதனை படைத்தது.அதேபோல், மகளிர் பிரிவில், சைதன்யா சி.பி.எஸ்.இ., திருச்-செங்கோடு எஸ்.பி.கே., மெட்ரிக், ரெட்டிப்பட்டி பாரதி மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளி அணிகள் பங்கேற்றன. உடற்கல்வி ஆசிரி-யர்கள் அஜித்குமார், உதயகுமார், சத்யா உள்ளிட்டோர் போட்-டியை ஒருங்கிணைத்தனர். மேலும், மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கைப்பந்து, ஆண்கள், பெண்கள், கபடி, ஆண்கள், பெண்கள், தடகள போட்டிகளும் நடந்தன. அதில், ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 17 வயதுக்கு உட்-பட்டோர் பிரிவில், கைப்பந்து போட்டியில், 4 பள்ளிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ரெட்டிப்பட்டி பாரதி மெட்ரிக் பள்ளி அணிகள் விளையாடின. அதில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இரண்டா-மிடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைமை-யாசிரியர் சீனிவாச ராகவன், உடற்கல்வி இயக்குனர் செல்-லம்மாள், உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், அன்புசெழியன், ஆசிரியர்கள் பாராட்டினர்.