/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய நாமக்கல் ஆசிரியர் போக்சோவில் கைது
/
பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய நாமக்கல் ஆசிரியர் போக்சோவில் கைது
பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய நாமக்கல் ஆசிரியர் போக்சோவில் கைது
பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய நாமக்கல் ஆசிரியர் போக்சோவில் கைது
ADDED : பிப் 14, 2025 07:08 AM
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார், 53, இவர், பெருமாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் கடந்த, 10ம் தேதி ஐந்தாம் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது, துாங்க செல்வதற்கு ஆங்கிலத்தில் எவ்வாறு கூற வேண்டும் என்பதை விளக்கினார். அப்போது, மாணவி ஒருவர் சந்தேகம் கேட்டபோது, உரிய பதிலை அளிக்காமல், பாலியல் ரீதியாக அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தி, பேசியுள்ளார். இதை மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள், நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேதப்பிறவி, சம்பந்தப்பட்ட மாணவி, ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். மாவட்ட குழந்தைகள் நலக்குழும தலைவர் சதீஸ்பாபு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார் ஆகியோரும் ஆசிரியரிடம் விசாரித்தனர். இதையடுத்து, ஆசிரியர் செல்வகுமாரை போக்சோ சட்டத்தில், மகளிர் போலீசார் கைது செய்தனர்.