/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : செப் 09, 2025 02:40 AM
திருச்செங்கோடு, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், திருச்செங்கோடு மலைசுற்றி ரோடு பெட்ரோல் பங்க் எதிரே உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கரூரில் நடக்க உள்ள முப்பெரும் விழாவில், பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும். வரும், 15ல் அண்ணாதுரை நினைவு தினத்தை, அனைத்து பகுதிகளிலும் கடைப்பிடிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின், வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு முதலீடுகளை ஈர்த்தும், நாமக்கல் மாவட்டத்திற்கு, 500 கோடி ரூபாயில் முதலீடு செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நன்றி தெரிவித்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.