/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தனியார் பஸ்சில் 40 பவுன் நகை மாயம் நாமக்கல் பெண் எஸ்.பி.,யிடம் புகார்

ADDED : ஜூன் 25, 2025 01:24 AM
நாமக்கல், 'பஸ்சில் திருடப்பட்ட, 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 40 பவுன் தங்க நகையை கண்டுபிடித்து தரும்படி', நாமக்கல் கோட்டை ஜெட்டிக்குலத்தெருவை சேர்ந்த ஷர்மிளா, 50, நாமக்கல் எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் என் மகளின் இல்லத்திருமண விழாவிற்காக, கடந்த, 20ல், சேலம் சென்றிருந்தேன். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, செந்தில்குமரன் என்ற தனியார் பஸ்சில், சேலம் - நாமக்கல் - கரூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்சில் ஏறி, நாமக்கல் வந்தேன். தொடர்ந்து, அங்கிருந்து, டவுன் பஸ்சில் ஏறி, பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்தேன். அங்கிருந்து, ஆட்டோவில் ஏறி, கோட்டையில் உள்ள என் வீட்டுக்கு சென்றேன். இரவு தாமதமாகி விட்டதால், பேக்கில் உள்ள பொருட்களை எடுத்து வைக்க தவறிவிட்டேன்.
நேற்று காலை, 7:00 மணிக்கு, பேக்கை திறந்து பார்த்தபோது, விலை உயர்ந்தை நகைகளை காணவில்லை. பஸ்சில் பயணிகளால் திருட்டுபோன, 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 40 பவுன் தங்க நகைகளை கண்டுபிடித்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.