/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழில் பெயர் பலகைநகராட்சி அறிவுறுத்தல்
/
தமிழில் பெயர் பலகைநகராட்சி அறிவுறுத்தல்
ADDED : ஏப் 23, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்,:குமாரபாளையத்தில் மே, 15க்குள் தமிழில் பெயர் பலகை வைக்க அனைத்து வணிக நிறுவனங்களுக்கும், நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமாரபாளையம் நகராட்சி சார்பில், வணிக நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நகராட்சி ஆணையாளர் (பொ) அருள் தலைமையில் நடந்தது. குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வணிக நிறுவனங்களிலும், தமிழக அரசின் உத்தரவுப்படி, தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும். இதை மீறும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.