/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையால் பரமத்தியில் குடிநீர் சப்ளை பாதிக்கும் அபாயம்
/
தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையால் பரமத்தியில் குடிநீர் சப்ளை பாதிக்கும் அபாயம்
தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையால் பரமத்தியில் குடிநீர் சப்ளை பாதிக்கும் அபாயம்
தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையால் பரமத்தியில் குடிநீர் சப்ளை பாதிக்கும் அபாயம்
ADDED : ஆக 30, 2025 12:55 AM
ப.வேலுார், பரமத்தி டவுன் பஞ்.,ல், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, 850க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. தற்போது, பொத்தனுார் தலைமை நீரேற்று நிலையம் சார்பில் பிரதான குழாய் அமைத்து, பரமத்தி டவுன் பஞ்., பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பரமத்தி டவுன் பஞ்.,க்குட்பட்ட வெள்ளாளபாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில், காவிரி குடிநீர் குழாய் செல்லும் பாதையில் தனி நபர்கள் சிலர் நடைபாதை அமைக்க உள்ளதாக, அப்பகுதி மக்கள் டவுன் பஞ்., நிர்வாகத்திற்கு புகாரளித்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை டவுன் பஞ்., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்கள், 'இந்த இடத்தில் நடைபாதை அமைத்தால், குடிநீர் வினியோகம் பாதிக்கும். அதனால் நடைபாதை அமைக்கும் பணியை கைவிட வேண்டும்' என, டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு நடைபாதை அமைக்கும் முடிவை கைவிட்டனர்.
இந்நிலையில், மீண்டும் நடை பாதை அமைக்கும் நோக்கத்துடன், வெள்ளாளபாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே, 11 குடியிருப்பு வாசிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில், 'ஹாஸ்பெட்டாஸ் மற்றும் வீட்டின் முன் கான்கிரீட் தரை அமைத்து ஆக்கிரமித்துள்ளதாகவும்; அதை அகற்றிக்கொள்ள வேண்டும்' என, நாமக்கல் டோல்கேட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் நோட்டீஸ் வழங்கினர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, நாமக்கல் டோல்கேட் நிர்வாக அதிகாரி சிவகாமசுந்தரிடம் கேட்டபோது, ''சேலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையர் மூலமாக வெள்ளாளபளையம் பகுதியில், 11 குடியிருப்புகளுக்கு மட்டும் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டனர். அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு எதற்காக எடுக்கப்படுகிறது என எங்களுக்கு எதுவும் தெரியாது. மேற்கொண்டு சேலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையரிடம் விபரங்களை கேட்டுக்கொள்ளுங்கள்,'' என்றார்.