sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத் 1,014 வழக்கில் ரூ.7.98 கோடி சமரசம்

/

மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத் 1,014 வழக்கில் ரூ.7.98 கோடி சமரசம்

மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத் 1,014 வழக்கில் ரூ.7.98 கோடி சமரசம்

மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத் 1,014 வழக்கில் ரூ.7.98 கோடி சமரசம்


ADDED : டிச 14, 2025 08:22 AM

Google News

ADDED : டிச 14, 2025 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்-றத்தில், 1,014 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, 7.98 கோடி ரூபாய்க்கு பைசல் செய்யப்பட்டது.

தேசிய லோக் அதாலத், தமிழ்நாடு மாநில சட்டப்-பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி முன்னிலையில், நேற்று நடந்தது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில், வழக்குகள் சமாதா-னமாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதலாவது அமர்வில், நீதிபதிகள் முனுசாமி, சச்-சிதானந்தம், செகனாஸ்பானு, இரண்டாவது அமர்வில், நீதிபதிகள் சண்முகபிரியா, மகாலட்-சுமி, தங்கமணி ஆகியோர் வழக்குகளை விசா-ரணை நடத்தினர்.

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்-றத்தை, சார்பு நிதிபதி வேலுமயில் மேற்பார்வை-யிட்டார்.

அதில், விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை, குடும்ப நலன், ஜீவனாம்சம், தொழி-லாளர் நலன், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள்விசார-ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்-முறையீடு செய்ய இயலாது. மக்கள் நீதிமன்-றத்தில் வழக்கில் வென்றவர், தோற்றவர் என்ற வேறுபாடு இருக்காது.

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்-செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, குமாரபாளையம், சேந்தமங்கலம் ஆகிய நீதிமன்றங்களில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 3,520 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,014 வழக்குகளுக்கு, 7 கோடியே, 98 லட்சத்து, 58,214 ரூபாய் தீர்வு காணப்பட்டது.






      Dinamalar
      Follow us