/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோகுல்நாதா அறக்கட்டளையில் தேசிய ஊட்டச்சத்து வார விழா
/
கோகுல்நாதா அறக்கட்டளையில் தேசிய ஊட்டச்சத்து வார விழா
கோகுல்நாதா அறக்கட்டளையில் தேசிய ஊட்டச்சத்து வார விழா
கோகுல்நாதா அறக்கட்டளையில் தேசிய ஊட்டச்சத்து வார விழா
ADDED : செப் 07, 2025 12:45 AM
நாமக்கல் :நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட ராமாபுரம்புதுாரில், கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை அமைந்துள்ளது.
இதன் அறக்கட்டளை சார்பில், 'சிறந்த வாழ்க்கைக்கு சரியாக சாப்பிடுங்கள்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, தேசிய ஊட்டச்சத்து வார விழா நாமக்கல் எஸ்.பி.எம்., உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. கோகுல்நாதா அறக்கட்டளை தலைவர் மாதையன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை டாக்டர் விஜயலட்சுமி, ஊட்டச்சத்தின் உணவுகள் குறித்தும், தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றியும், ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.