/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் மோகனுாரில் விழிப்புணர்வு பேரணி
/
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் மோகனுாரில் விழிப்புணர்வு பேரணி
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் மோகனுாரில் விழிப்புணர்வு பேரணி
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் மோகனுாரில் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 30, 2025 05:07 AM
மோகனுார்: தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, வட்டார போக்குவரத்து, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி மோகனுாரில் நடந்தது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியின் சாலை பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்-வாளர் சக்திவேல் துவக்கி வைத்தார். மோகனுார் மாரியம்மன் கோவிலில் துவங்கிய பேரணி, காட்டுப்புத்துார் சாலை, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், நாமக்கல் சாலை வழியாக சென்று, காந்தமலை பாலசுப்ரமணிய கோவில் முன் முடிந்தது.பேரணியில், சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்-டியதன் அவசியம், ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை பொதுமக்க-ளுக்கு ஏற்படுத்தினர். மோகனுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பெரியசாமி, என்.சி.சி., ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி தேசிய மாணவர் படை அலுவலர் சவுந்திரராஜன், பள்ளி, கல்லுாரி மாணவ, மாண-வியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

