/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வட பத்ரகாளியம்மனுக்குநவசண்டி யாக பூஜை
/
வட பத்ரகாளியம்மனுக்குநவசண்டி யாக பூஜை
ADDED : ஜன 04, 2025 01:22 AM
நாமகிரிப்பேட்டை, ஜன. 4-
நாமகிரிப்பேட்டை, ஈஸ்வரமூர்த்தி பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வடபத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. விவசாயம் செழிக்க, நவசண்டி யாகம், நேற்று முன்தினம் நடந்தது. இதில் பலாசு, கருங்காலி, அரசு, அத்தி, சந்தனக்கட்டை, எள், உழுந்து, நெற்பொறி, பயறு, நெல், வன்னி, ஆல், வில்வம், நாயுருவி, தர்ப்பை, வெள்ளெருக்கு, தேங்காய், மா, நெய், எருக்கு, அறுகு, முருக்கு உள்ளிட்ட சக்தி வாய்ந்த மூலிகைகளை கொண்டு யாகம் செய்தனர்.
வடபத்ரகாளி அம்மனுக்கு பால், நெய்,
சந்தனம், திருமஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நாமக்கல், ராசிபுரம், ஆத்துார், சேலம், பெரம்பலுார், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பொதுமக்கள் அனைவருக்கும்
அன்னதானம் வழங்கப்பட்டது.

