/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவிலில் நவசண்டி யாக பூஜை
/
மாரியம்மன் கோவிலில் நவசண்டி யாக பூஜை
ADDED : நவ 03, 2024 01:19 AM
மாரியம்மன் கோவிலில்
நவசண்டி யாக பூஜை
நாமக்கல், நவ. 3-
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில், 48ம் நாள் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு, நவசண்டி யாகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், மகா கணபதி வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, புண்யாகம், கலச பூஜை, ஸ்ரீதேவி மகாத்மியம் ஹோமம், கோ பூஜை, 64 யோகினி பூஜை, 64 பைரவர் பூஜை, தீபாராதனை நடந்தது.
நேற்று காலை, 8:00 மணிக்கு, விக்னேஷ்வரா பூனை, புண்யாகம் கலச பூஜை, சுமங்கலி பூஜை, வஸ்த்ர ஹோமம், பூர்ணாகுதி, சங்கபாபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது. மூலவர் பலப்பட்டரை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
எம்.பி., ராஜேஸ்குமார், மாநகராட்சி துணை மேயர் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சண்டி ஹோமத்தையொட்டி, சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்திலும், மதியம், சிறப்பு முத்தங்கி அலங்காரத்திலும் எழுந்தருளினார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.