/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் வரும் 31ல் நாயன்மார் திருவிழா
/
ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் வரும் 31ல் நாயன்மார் திருவிழா
ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் வரும் 31ல் நாயன்மார் திருவிழா
ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் வரும் 31ல் நாயன்மார் திருவிழா
ADDED : ஜூலை 29, 2025 01:30 AM
ராசிபுரம், ராசிபுரத்தில், வல்வில் ஓரியால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, 63 நாயன்மார்களுக்கு ஆடி மாதத்தில் விழா எடுத்து வருகின்றனர். அறுபத்து மூவர் பெருவிழா என்ற பெயரில் இவ்விழாவை, கைலாசநாதர் சிவனடியார் திருகூட்ட அறக்கட்டளையினர், மூன்று நாட்கள் நடத்தி வருகின்றனர். முதல் நாள் விழா நாளை மறுநாள், 31 மாலை, 5:00 மணிக்கு குறும்ப நாயனார் குருபூஜையுடன் தொடங்குகிறது.
தொடர்ந்து, 6:00 மணிக்கு, 'துறந்த முனிவர் தொழும் பரவை துணைவர்' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. 1 காலை, 7:00 மணிக்கு விநாயகர், முருகன், நந்திபெருமான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு ஓதுவார் அய்யப்பன் திருமுறை பாடுகின்றனர். மாலை, 6:00 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 2 காலை, 8:00 மணிக்கு, கோவிலில் இருந்து பன்னிரு திருமுறைகள் அடியார் பெருமக்களை, கைலாய வாத்தியம் முழங்க ஊர்வலமாக அரிமா சங்க மண்டபத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும், காலை, 9:00 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் நிகழ்சியும் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, திருக்கோடி தீபம் ஏற்றுதல், 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடக்கிறது.