sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தே.ஜ.கூட்டணி ஆர்ப்பாட்டம்

/

தே.ஜ.கூட்டணி ஆர்ப்பாட்டம்

தே.ஜ.கூட்டணி ஆர்ப்பாட்டம்

தே.ஜ.கூட்டணி ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 11, 2026 07:28 AM

Google News

ADDED : பிப் 11, 2026 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை முன், தி.மு.க., அரசை கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று பேசுகையில், ''தமிழகத்தில் கடந்த, ஐந்தாண்டு காலம் இருண்ட காலமாக இருந்து வந்தது. குழந்தை முதல் பெண்கள் வரை பாதுகாப்பு இல்லை. டபுள் இன்ஜின் இருந்தால் மட்டுமே, ஒரு மாநிலம் வளர்ச்சியை அடையும். தமிழகத்திற்கு, 11 மருத்துவ கல்லுாரிகளை, டபுள் இன்ஜின் இருந்ததால் தான், இ.பி.எஸ்., கொண்டுவந்தார். வரும் சட்டசபை தேர்தலில் டபுள் இன்ஜின் இருந்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி அடைய முடியும்,'' என்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ., பொன் சரஸ்வதி, பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் மகேஸ்வரன், மாநில தொழில் பிரிவு செயலாளர் நாகராஜன், த.மா.கா., மாவட்ட தலைவர் செல்வகுமார், பா.ம.க., மாவட்ட தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us