ADDED : ஜூன் 20, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டார கிராம பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிப்பாளையம் அருகே ஒடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, புதுப்பாளையம், விளாங்காட்டூர் உள்ளிட்ட பல கிராமப்புற பகுதிகள் உள்ளன. விவசாயம், கால்நடை வளர்ப்பில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கிராம பகுதிகளில், மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக, இரவு நேரத்தில் மர்ம நபர்கள் டூவீலரில் உலா வருகின்றனர். எனவே இப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், குற்ற செயல்கள் நடந்தாலும், குற்றவாளிகளை கண்டறிவதில் சிரமம் ஏற்படும். கிராம பகுதிகளை ஆய்வு செய்து, முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.