/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., சார்பில்நீர்மோர் பந்தல் திறப்பு
/
அ.தி.மு.க., சார்பில்நீர்மோர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 18, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்:நாமக்கல் பிரதான சாலையில் உள்ள நேதாஜி சிலை அருகே, அ.தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. முன்னாள்
எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை வகித்து, நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி உள்ளிட்ட பழங்களையும், நீர்மோரையும் வழங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முரளி பாலுசாமி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவசிதம்பரம், நகர அவை தலைவர் விஜய்பாபு மற்றும் ஒன்றிய செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.