/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கற்போருக்கு அடிப்படை தேர்வு
/
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கற்போருக்கு அடிப்படை தேர்வு
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கற்போருக்கு அடிப்படை தேர்வு
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கற்போருக்கு அடிப்படை தேர்வு
ADDED : நவ 11, 2024 08:08 AM
நாமக்கல்: நாமக்கல் வட்டார வளமையம் சார்பில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் படிக்கும், கற்போர் வசதிக்கேற்ப, அவர்கள் வசிக்கும் வீட்டிற்கும், வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று தன்னார்வலர்கள் தேர்வு நடத்தினர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர், வட்டார கல்வி அலுவலர், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் ஆகியோர், தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிட்டனர். இத்தேர்வில் வாசித்தல், 50 மதிப்பெண், எழுதுதல், 50 மதிப்பெண், எண்ணறிவு, 50 மதிப்பெண் என மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதினர். நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம், 923 மையங்களில், 3,249 ஆண்கள், 11,112 பெண்கள் என, மொத்தம், 14,361 பேர் தேர்வெழுதினர்.