ADDED : ஆக 09, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், ஆணவ படுகொலையை கண்டித்து, புரட்சி பாரதம் கட்சி சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் துரை இளம்வழுதி தலைமை வகித்தார்.
அதில், திருநெல்வேலியில் நடந்த கவின் ஆணவ படுகொலையை கண்டித்தும், ஆணவ படுகொலையை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். மாவட்ட பொறுப்பாளர்கள், நகர, ஒன்றிய, பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.