/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தடையில்லா மின்சாரத்துக்கு புதிய மின்பாதை அமைப்பு
/
தடையில்லா மின்சாரத்துக்கு புதிய மின்பாதை அமைப்பு
ADDED : மே 03, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் ஆவாரங்காடு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினமும், 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும், உள்நோயாளியாக பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில், கடந்த வாரம், பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.
இதையடுத்து, நேற்று, பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அரசு மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க, தனி மின் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் மின் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.