/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருமணமான நான்கு நாளில் புதுப்பெண் ஓட்டம் விரக்தியில் புதுமாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை
/
திருமணமான நான்கு நாளில் புதுப்பெண் ஓட்டம் விரக்தியில் புதுமாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை
திருமணமான நான்கு நாளில் புதுப்பெண் ஓட்டம் விரக்தியில் புதுமாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை
திருமணமான நான்கு நாளில் புதுப்பெண் ஓட்டம் விரக்தியில் புதுமாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜூலை 12, 2025 02:17 AM

ப.வேலுார்:திருமணமான நான்கு நாட்களில் புதுப்பெண் ஓட்டம் பிடித்ததால், விரக்தியடைந்த புது மாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்துாரை சேர்ந்தவர் சிவசண்முகம், 36; மினி ஆட்டோ டிரைவர். திருமணமாகி விவாகரத்து பெற்றவர். மதுரையை சேர்ந்த திருமண புரோக்கர்கள் மூலம், இரண்டாவது திருமணத்துக்கு மணமகளை தேடி வந்துள்ளார்.
இந்நிலையில், விருதுநகர், ஆலம்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னசாமி மகள் தீபா, 30, என்ற பெண்ணை, ஜூலை 7ல், மதுரை, மாட்டுத்தாவணி கோவிலில் சிவசண்முகம் திருமணம் செய்தார். திருமணத்தின்போது, சிவசண்முகம் குடும்பத்தார் மட்டுமே கலந்துகொண்டனர். மணமகள் குடும்பத்தார் கலந்து கொள்ளவில்லை.
மேலும், புரோக்கர்களுக்கு 1 லட்சம் ரூபாய், மணமகள் தீபாவுக்கு 1 லட்சம் ரூபாயை, வரதட்சணையாக சிவசண்முகம் கொடுத்துள்ளார். திருமணம் முடிந்தவுடன், தீபாவை அழைத்துக்கொண்டு சிவசண்முகம் ஜேடர்பாளையம் வடகரையாத்துாரில் உள்ள வீட்டிற்கு சென்றார்.
ஜூலை 8ல் திடுமல் ராசாம்பாளையத்தில் உள்ள சிவசண்முகத்தின் அக்கா மலர்கொடி வீட்டிற்கு, புதுமண தம்பதியர் விருந்துக்கு சென்றனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தீபாவை காணாமல், சிவசண்முகம் அதிர்ச்சியடைந்தார்.
திருமணத்துக்காக எடுத்த பட்டுப்புடவை, ஆறு பவுன் தாலிக்கொடியுடன் தலைமறைவான தீபாவை தேடியபோது, புரோக்கர் மற்றும் தீபாவின் மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவசண்முகம் விரக்தியில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, சிவசண்முகம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நல்லுார் போலீசார், தலைமறைவான தீபா மற்றும் மூன்று புரோக்கர்களை தேடி வருகின்றனர். திருமணமான நான்கு நாளில், புதுமாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.