sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்


ADDED : ஜன 14, 2024 12:27 PM

Google News

ADDED : ஜன 14, 2024 12:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஞ்., அலுவலகத்தில்

பொங்கல்

கொண்டாட்டம்

மாமுண்டி அக்ரஹாரம் பஞ்சாயத்து அலுவலகம் முன், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மல்லசமுத்திரம் ஒன்றியம், மாமுண்டிஅக்ரஹாரம் பஞ்சாயத்தில் நேற்று, ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாகண்ணன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. செயலாளர் பாலமுருகன், வார்டு உறுப்பினர்கள், துாய்மை காவலர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்று பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.

தேசிய அளவிலான கராத்தே

குறிஞ்சி பள்ளி சாதனை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் தேசிய அளவிலான ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் கட்டா போட்டிகள் நடைபெற்றது.

இதில், நாமக்கல் குறிஞ்சி கல்வி நிறுவனத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 8 வயதிற்குட்பட்டோர் கட்டா பிரிவில் மாணவன் சர்வேஸ், நான்காம் வகுப்பு மாணவன் விஸ்வா இருவரும் முதல் பரிசு பெற்றனர். 12 வயதிற்கு உட்பட்டோர் கட்டா பிரிவில் மாணவன் ரித்திஷ் அஸ்வின் இரண்டாம் பரிசு, 13 வயதுக்கு உட்பட்டோர் கட்டா பிரிவில் மாணவி ஜெயப்பிரியா இரண்டாம் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் வாழ்த்தினார். பள்ளி இயக்குனர்கள், மேலாளர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கபிலர்மலை பாலசுப்பிரமணிய

கோவிலில் 17ல் கொடியேற்றம்

கபிலர்மலை, பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு வரும், 17 அதிகாலை, 5:00 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது.

கபிலர்மலை பாலசுப்பிரமணியர் கோவிலில் நடப்பாண்டு தைப்பூச தேர்த் திருவிழா வரும், 25 ல் திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு அன்று அதிகாலை, 4:30 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, மாலை, 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

அன்று முதல் பக்தர்கள் பால் காவடி, இளநீர் காவடி, ஆப்பிள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். கடந்தாண்டு கபிலர்மலை பகுதி யில், புலி நடமாட்டத்தால் தைப்பூச திருவிழாவிற்கு பக்தர்கள் அச்சத்தினால் வருவது குறைந்தது. இந்தாண்டு அதிகம் பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடியேற்று விழா, திருத்தேர் விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர் ஜனனி, தக்கார் வினோதினி மற்றும் திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.

சமத்துவபுர வீடுகளுக்கே

பட்டா வழங்காத பரிதாபம்

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சமத்துவபுர வீடுகளுக்கே, இன்று வரை பட்டா வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

தமிகத்தில் கடந்த, 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க., மாநிலம் முழுவதும் சமத்துவபுரங்களை கட்டியது. இதில், அனைத்து சமுதாய மக்களும் சேர்த்து வசிப்பதற்காக அனைவருக்கும் வீடும் வழங்கியது. நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்பட்டி ஊராட்சி பிலிப்பாக்குட்டையில் உள்ள சமத்துவபுரத்தில், 100 வீடுகள் உள்ளன. இவைகள் அப்போதே அனைவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைத்திலும் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இதில், 71 வீடுகளுக்கு மட்டும் வருவாய்துறை பட்டா வழங்கியுள்ளது. 29 வீடுகளுக்கும் பட்டா வழங்கவில்லை.

கடந்த, 15 ஆண்டுகளாக கால தாமதம் செய்து வருகின்றனர். இது குறித்து வருவாய்துறையினரிடம் சமத்துவபுர மக்கள் பலமுறை மனு அளித்தும் பயனில்லை. இந்நிலையில் நேற்று, பா.ஜ., ஒன்றிய தலைவர் சிவக்குமார் தலைமையில், 29 பேரும் மாவட்ட கலெக்டரிடம் பட்டா கேட்டு மனு வழங்கியுள்ளனர்.

ஆர்.என்., ஆக்ஸ்போர்டு பள்ளி

மாணவர்களுக்கு எஸ்.பி., பாராட்டு

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சக்ரா நகரில் உள்ள ஆர்.என்., ஆக்ஸ்போர்டு ஹிட்ஸ் பள்ளி மாணவர்கள், மாநில அளவில் கரூரில் நடந்த கராத்தே போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்தனர்.

கராத்தே போட்டியில் மூன்றாம் வகுப்பு மாணவி விதுஷா முதலிடம், ப்ரக்னியாராஜ், வைஷ்ணவி இரண்டாமிடம், பவேஷிகா, யுகி, சர்வஜித், ஹரியாதவ், மோஹித் ஆகியோர் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தனர். மாணவர்களை நாமக்கல் மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் மற்றும் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனத்தின் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் அருள், சேகர், சம்பூர்ணம், ஹிட்ஸ் பள்ளி முதல்வர் ஆஷா உள்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.

தி.மு.க., சமூக

ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில். 'தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணியின், 'சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு' நாமக்கல்லில் நேற்று நடந்தது.

கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். இந்த பயிற்சி பாசறை, சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை குறித்து, காணொலி காட்சி மூலம் நடந்தது.

எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஆனந்த்குமார், நகராட்சி தலைவர்கள் கலாநிதி, கவிதா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பொன் சித்தார், மாணவர் அணி அமைப்பாளர் சத்தியசீலன் உள்பட பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இல்லம் தேடி கல்வி

சார்பில் பொங்கல் விழா

குமாரபாளையத்தில், கலைமகள் வீதியில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையம், விடியல் ஆரம்பம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர் பலர் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர்.

பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் பரிசு வழங்கினார். தன்னார்வலர்கள் ராணி, சித்ரா, நிர்வாகிகள் பஞ்சாலை சண்முகம், தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.

பட்டுப்போன மரம்; வெட்டும் பணி துவக்கம்

குமாரபாளையத்தில், பட்டுப்போன மரம் வெட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், பெரிய அளவிலான மரம் காய்ந்த நிலையில் உள்ளது. இதன் கிளைகள் எதிரில் உள்ள வீடுகளின் மேல் பரவியது. அருகில் உள்ள நில அளவை தாசில்தார் அலுவலகம் மீதும் படர்ந்தன. எந்நேரமும் ஒடிந்து விடும் நிலையில் இருந்தது. இதனை அகற்ற ஆர்.டி.ஓ.,விடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, ஆர்.டி.ஒ. சுகந்தி ஆய்வு மேற்கொண்டு, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மரத்தை வெட்ட அறிவுறுத்தினார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் மகளிரணி மற்றும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று, இந்த மரம் வெட்டும் பணி துவங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் நீங்கி மகிழ்ச்சியடைந்தனர்.

கிலோ ரூ.2,500க்கு

குண்டுமல்லி விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ப.வேலுாரில் நேற்று நடந்த பூக்கள் ஏலத்தில் குண்டுமல்லி கிலோ, 2,500 ரூபாய்க்கு விற்பனையானது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் தாலுகாவில் உள்ள பிலிக்கல்பாளையம், சாணார்பாளையம், பரமத்தி, கரூர் மாவட்டம் சாமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு, தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம், 800 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டுமல்லி, நேற்று 2,500 ரூபாய், 100 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி, அரளி பூக்கள் தலா, 200 ரூபாய்க்கு விற்பனையாகின. 500 ரூபாய்க்கு விற்பனையான முல்லை, 2,000 ரூபாய்க்கு விற்பனையாகின. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரூ.1.50 கோடிக்கு ஆடு விற்பனை

வியாபாரிகள் இல்லாததால் மந்தம்

பொங்கல் பண்டிகைக்கு வாரச்சந்தையில், 1.50 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. வியாபாரிகள் குறைந்த அளவில் வந்ததால், விற்பனை மந்தமாக இருந்தது.

நாமக்கல்லில் நேற்று ஆட்டு சந்தை நடந்தது. நாமக்கல், புதன்சந்தை, சேந்தமங்கலம், ராசிபுரம், எருமப்பட்டி, வளையப்பட்டி, மோகனுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என, மொத்தம், 15 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

வரும் 17ல், கரிநாள் பண்டிகை என்பதால், நேற்று நடந்த சந்தையில் இறைச்சிக்காக அதிகளவு ஆடுகள் விற்பனையானது. ஒரு ஜோடி ஆடு குறைந்தபட்சம், 10 ஆயிரம் ரூபாய், அதிகபட்சம், 35 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ஒரு ஆட்டு குட்டி, 1,000 முதல், 2,000 ரூபாய் வரை விலை போனது. நேற்று நடந்த ஆட்டு சந்தையில், 1.50 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.

'கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு குறைந்த அளவில் ஆடுகள் விற்பனையானது. ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தும், போதிய வியாபாரிகள் வராததால், விற்பனை மந்தமாக இருந்தது' என, வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us