/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
ADDED : ஜன 16, 2024 10:50 AM
தென்னிந்திய நடிகர் சங்க
உறுப்பினர்களுக்கு பரிசு
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் அதன் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சிக்கு நியமன செயற்குழு உறுப்பினர் ஆனந்த் தலைமை வகித்தார். தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்
பட்டது.
முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மலைப்பாதையில் போதையில்
அலப்பறை; ௨ பேருக்கு அபராதம்
நாமக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு, விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் வனத்துறை சார்பில் கொல்லிமலை அடிவாரம், காரவள்ளியில் சோதனைச்சாவடி அமைத்து, பயணிகளின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்து அனுப்புகின்றனர். ரோந்திலும்
ஈடுபடுகின்றனர்.
இதன்படி வனத்துறையினர் நேற்று ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். மலைப்பாதை எட்டாவது கொண்டை ஊசி வளைவில், திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த சிவக்குமார், 30, அவரது நண்பர் தீபக், 21, ஆகியோர், மது போதையில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு
ஏற்படுத்தினர்.
இதையடுத்து கொல்லிமலை வனச்சரக அலுவலர் சுகுமார், இருவருக்கும், 2,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
முத்துகாபட்டியில் பொங்கல் திருவிழா
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டி, கருப்பணார் கோவில் வீதியில், 10க்கும் மேற்பட்ட பெண்கள், சூரிய பகவானுக்கு வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் வைத்து, தேங்காய், வழைப்பழம் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் பொங்கல் வழங்கி, பண்டிகையை மிக சிறப்பாக
கொண்டாடினர்.
ஆண்டாள்
திருக்கல்யாண உற்சவம்
குமாரபாளையத்தில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவ விழாவில், சொர்க்கவாசல் திறப்பு, துவாதசி விரத பூஜை, அனுமன் ஜெயந்தி விழா, கூடாரவல்லி சிறப்பு பூஜை உள்ளிட்ட வைபவங்கள் நடந்தன. இதன் ஒரு கட்டமாக, நேற்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. இதில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று ராமர் கோவிலில் திருப்பாவை பாராயணம் மற்றும் பஜனை நிகழ்ச்சி நடக்கிறது.
போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா
பொங்கல் விழாவை முன்னிட்டு, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் பொங்கல் வைத்து
கொண்டாடினர்.
ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், போலீசார் சார்பில், நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் முன் சுத்தம் செய்யப்பட்டு, கோலம் போட்டு கரும்பு, மஞ்சள் கொத்து வைத்து சர்க்கரை மற்றும் வெண்பொங்கல் வைத்து கொண்டாடினர். ப.வேலுார் டி.எஸ்.பி., ராஜமுரளி, இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமை வகித்தனர். போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொண்டனர்.
கட்டுப்பாட்டை இழந்த
மொபட்: ஒருவர் பலி
மோகனுார் அடுத்த கீழ் பேட்டப்பாளையத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் குணசேகரன், 50. இவர் கடந்த, 12 மாலை, 7:00 மணியளவில் தொட்டியத்தில் உள்ள, அண்ணன் வீட்டிற்கு டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளார்.
காட்டுபுத்துார் கொங்கு நகர் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மொபட் சாலையோர சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த குணசேகரனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று குணசேகரன் உயிரிழந்தார். மோகனுார் போலீசார்
விசாரிக்கின்றனர்.
முட்டை விலை
10 காசு சரிவு
நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும், 8 கோடி முட்டைக்கோழிகள் மூலம், தினசரி, 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் முட்டை விலை, 10 காசு குறைத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 505 காசாக நிர்ணயிக்கப்பட்டது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டை விலை (காசுகளில்): சென்னை, 570, பர்வாலா, 568, பெங்களூரு, 565, டில்லி, 610, ஐதராபாத், 520, மும்பை, 600, மைசூரு, 565, விஜயவாடா, 550, ஹொஸ்பேட் 525, கோல்கட்டா, 595 காசு என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காளப்பநாயக்கன்பட்டியில்
2 மதுபான கடை இடமாற்றம்
காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்., பகுதியில், கொல்லிமலை சாலையில் இயங்கி வந்த, 2 மதுபான கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.
சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்., பகுதியில், கொல்லிமலை சாலையில் இருபுறமும் எதிர் எதிராக, 2 மதுபான கடைகள் கடந்த, 10 ஆண்டுகளாக இயங்கி வந்தன. தற்போது, 2 மதுபான கடைகளும் காளப்பநாயக்கன்பட்டி புதிய மின் மயானத்திற்கு அருகே மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கொல்லிமலை சாலையில், 10 ஆண்டுகளாக இயங்கி வந்த, 2 மதுபான கடையால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு, இடையூறு, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவ்வழியாக அச்சத்துடன் கடந்து செல்வது போன்ற செயல்களால், அப்பகுதியை சேர்ந்த மக்கள், மதுபான கடையை மாற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இந்த மனுவை ஏற்ற அதிகாரிகள், 2 மதுபான கடைகளையும், மக்களுக்கு இடையூறு இல்லாத இடமான மின் மயானத்திற்கு அருகே இடமாற்றம் செய்யப்பட்டது.
சவுண்டம்மன் கோவிலில்
சாமுண்டி அழைப்பு வைபவம்
குமாரபாளையத்தில் உள்ள, சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் திருவிழா, கடந்த, 8ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. தேவாங்க சமுதாயத்தினர் அதிகளவில் இருப்பதால், முக்கிய திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. குமாரபாளையத்தில் இரு சவுண்டம்மன் கோவில்கள் இருப்பதால், ஆண்டிற்கு ஒரு கோவில் திருவிழா நடத்துவது என, பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு, அவ்வாறே பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
நேற்று, சாமுண்டி அழைப்பு வைபவத்தையொட்டி அம்மன், சரஸ்வதி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று இரவு, 7:00 மணியளவில் மகா ஜோதி திருவீதி உலா நடக்கிறது. நாளை காலை, மஞ்சள் நீராட்டு திருவீதி உலா, மாலையில் அலங்கார ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.