sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்


ADDED : பிப் 04, 2024 10:39 AM

Google News

ADDED : பிப் 04, 2024 10:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

3 லட்சம் ரூபாய் நோட்டுகளால்

செல்வ விநாயகருக்கு மாலை

சில்லாங்காடு பகுதியில் உள்ள, செல்வ விநாயகருக்கு மூன்று லட்சம் ரூபாய் நோட்டுகளால் பண மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது.

பள்ளிப்பாளையம் அருகே, சில்லாங்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. தினமும் சுவாமிக்கு பூஜை நடக்கும். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்வர். கும்பாபிேஷகம் முடிந்து மண்டல பூஜை தினமும் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு, ஒன்பதாம் நாள் மண்டல பூஜையை முன்னிட்டு, செல்வ விநாயகருக்கு மூன்று லட்சம் ரூபாய் நோட்டுகளால் பண மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செங்கோட்டில்

மஞ்சள் ஏலம்

திருச்செங்கோடு, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது. விரலி மஞ்சள் குவிண்டால், 7,302 முதல், 11,919 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள் 8,100 முதல், 10,922 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், ஒன்பது லட்சத்து, 13 ஆயிரம் ரூபாய்க்கு மஞ்சள் விற்பனையானது.

போக்சோவில் இளைஞர் கைது

பள்ளிப்பாளையம் அருகே வெப்படையை சேர்ந்தவர் சதீஸ், 22. இவர் சில நாட்களுக்கு முன்பு, 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசை வார்த்தை கூறி அவரை வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார். வெப்படை போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் ஓசூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசூர் சென்ற போலீசார் மாணவியை மீட்டனர். சதீைஸ போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.

கைத்தறி

தொழிலாளி மாயம்

குமாரபாளையம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் திருமால், 42, கைத்தறி கூலித்தொழிலாளி. இவர் பல மாதங்களாக, கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இவரது மனைவி ருக்மணி, 38, இவரிடம், தைரியமாக இருங்கள், மெல்ல மெல்ல கடன் செலுத்தி விடலாம், என கூறி வந்துள்ளார்.

கடந்த நவ., 27ல் வங்கிக்கு கடன் தொகை செலுத்த காலை, 10:00 மணியளவில் சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் ருக்மணி புகார் செய்து, காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு கொடுத்துள்ளார்.

போதையில் வாலிபரை

தாக்கிய 4 பேர் கைது

வெப்படை பகுதியில், மது போதையில் வாலிபரை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பாளையம் அருகே தாஜ்நகரை சேர்ந்த மணிகண்டன், 27, மதுக்கடை பாரில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சின்ன ஆனங்கூர் என்ற இடத்தில் வரும் போது, ரங்கனுாரை சேர்ந்த நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் ஸ்ரீ ஹரிநிதிஷ் 22, பள்ளிப்பாளையம் டையிங் மில்லில் வேலை செய்யும் அஜித், 24, ஆனங்கூர் தொழிலாளி சக்திவேல், 20, ஆவாரங்காடு நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் கவுதம், 23, ஆகிய நான்கு பேர் மது போதையில், மணிகண்டனை வழிமறித்து கடுமையாக தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

படுகாயமடைந்த மணிகண்டன் அளித்த புகார்படி, வெப்படை போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.

வித்யாவிகாஸ் பொறியியல், தொழில்நுட்ப

கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

திருச்செங்கோடு வித்யாவிகாஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின், 12-வது பட்டமளிப்பு விழா, வித்யா விகாஸ் கல்வியியல் கல்லுாரியின், 16-வது பட்டமளிப்பு விழா மற்றும் வித்யா விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதலாவது பட்டமளிப்பு விழா கல்லுாரி கலையரங்கில் நடந்தது.

கல்லுாரி செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் குணசேகரன் பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். பொறியியல் கல்லுாரி முதல்வர் பூரணபிரியா ஆண்டறிக்கை வாசித்தார். இளங்கலை பட்டதாரிகள், 664 பேர், முதுகலை பட்டதாரிகள், 80 பேருக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கி, திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பேசினார். நிர்வாக அறங்காவலர்கள் சிங்காரவேல், இராமலிங்கம், முத்துசாமி, துறைத்தலைவர்கள். பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இரு சக்கர வாகனம்

மோதி பெண் காயம்

குமாரபாளையத் தில் நடந்து வந்தவர் மீது, டூவீலர் மோதியதில் பெண் படுகாயமடைந்தார்.

குமாரபாளையம், ஓலப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ஜோதி, 40. நேற்றுமுன்தினம் அதிகாலை, 5:30 மணியளவில் வீட்டின் குப்பைகளை, எதிரில் உள்ள அரசு கலைக்கல்லுாரி முன்புறம் கொட்டி விட்டு, சாலையை கடந்து வர முயற்சித்தார்.

அப்போது, அவ்வழியே டூவீலர் ஓட்டி வந்தவர், இவர் மீது மோதியதில், பலத்த காயமடைந்தார். குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ஜோதி சேர்க்கப்பட்டார்.

குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நாமக்கல்லில் ஓய்வூதியர் சங்க

5வது மாவட்ட மாநாடு

அஞ்சல் - ஆர்.எம்.எஸ்., ஓய்வூதியர் சங்கத்தின், 5வது மாவட்ட மாநாடு, நாமக்கல்லில் நடந்தது. தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். உதவி செயலாளர் சுப்ரமணியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராமசாமி, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், 8 வது ஊதியக்குழு அமைக்க வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட, 18 மாத டியர்னஸ் ரிலீப் உடனே வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். பென்சன் கம்யூடேசன் காலத்தை, 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். கூடுதல் ஓய்வூதியம், 65 வயது நிறைவடைந்தவுடன் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு, பஸ்களில் கட்டண சலுகை வழங்க வேண்டும்.

வருமான வரி உச்சவரம்பு, 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உடைந்த குடிநீர் குழாய்

சரி செய்த ஊழியர்கள்

அலங்காநத்தம் அருகே, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை சரி செய்தனர்.

எருமப்பட்டி யூனியனில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மோகனுார் காவேரி ஆற்றில் இருந்து, துாசூர் வழியாக அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, பவித்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அலங்காநத்தம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நான்கு நாட்களாக குடிநீர் வீணாவதாகவும், வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, குழாயில் உடைப்பு சரி செய்யப்பட்டு, கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் சீராகி உள்ளதாக பொது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

எலச்சிபாளையத்தில்

கையெழுத்து இயக்கம்

விபத்தில் சிக்கும் ஓட்டுனரின் தண்டனையை, வாபஸ் பெற வேண்டும் எனக்கூறி, எலச்சிபாளையத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

எலச்சிபாளையம் ஆட்டோ ஸ்டாண்டு அருகில், சி.ஐ.டி.யு., நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் சார்பில், மாவட்ட குழு உறுப்பினர் முனியப்பன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. ஓட்டுனர் விபத்து ஏற்படுத்தி மரணம் உண்டானால், அவர் ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் ஏழு லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என அரசு சட்டம் இயற்றி உள்ளது. இதனால், ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடந்தது.

வரும் 6ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இங்கு பெறப்படும் கையொப்பங்கள், அந்தந்த போக்குவரத்து ஆய்வாளர்களிடம் மனுவாக கொடுத்து, கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாவட்ட செயலாளர் சுரேஷ், கிளை நிர்வாகிகள் சேகர், மாபாஷா, அசோக், சுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருநீலகண்டேஸ்வரர்

நாயனார் குருபூஜை

அகரம் கிராமத்தில் உள்ள, திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் குருபூஜை நடந்தது.

எலச்சிபாளையம் அருகே, அகரம் கிராமத்தில் இருக்கும் திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் நேற்று, குலாலர் சமுதாயம் சார்பில், நாயனார் குருபூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். நிர்வாகிகள் சரவணன், சீனிவாசன், விஜயகுமார், சுந்தரராஜன், சாந்தி, பூங்கொடி, ராஜி என பலர் கலந்து கொண்டனர்.

கள்ளவழி கருப்பனார்

முப்பூஜை திருவிழா

நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆர்.புதுப்பட்டியில் உள்ள கள்ள வழி கருப்பனார் கோவிலில் இன்று முப்பூஜை விழா நடக்கிறது.

நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற கள்ள வழி கருப்பனார் கோவில் உள்ளது. இங்கு தை மாதம், 4 வது வாரம் ஞாயிற்றுக்கிழமை முப்பூஜை விழா நடப்பது வழக்கம். முப்பூஜை விழாவில் பன்றி, ஆடு, கோழி ஆகியவை பலியிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் விருந்து வைப்பது வழக்கம். இவ்விழா இன்று பகல், 12:00 மணிக்கு தொடங்குகிறது. இரவு விருந்து நடப்பதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

அரசு கல்லுாரியில் நாட்டு

நலப்பணி திட்ட முகாம்

சேந்தமங்கலம், அரசு கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நடந்தது.

சேந்தமங்கலம் அருகே, பேளுக்குறிச்சி கணவாய் மேட்டில் அரசு கலைக்கல்லுாரி உள்ளது. இங்கு நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா நடந்தது. முதல்வர் பாரதி தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் ரவி வரவேற்றார். அட்மா குழு தலைவர் அசோக்குமார், குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.

இதை தொடர்ந்து அங்குள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் பூப்பந்து போட்டிகளை துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் நந்தகுமார், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us