/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அண்ணாமலையுடன் கூட்டணி பேசவில்லை: தினகரன் விளக்கம்
/
அண்ணாமலையுடன் கூட்டணி பேசவில்லை: தினகரன் விளக்கம்
ADDED : நவ 23, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், ''அண்ணாமலையுடன், கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை,'' என, அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
கரூரில், நேற்று இரவு, திருமண விழா ஒன்றில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: திருமண விழாவில் பங்கேற்க வந்த, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன், இரண்டு நிமிடம் மட்டும் பேசி உடல் நலம் விசாரித்தேன். கூட்டணி தொடர்பாகவும், அரசியல் தொடர்பாகவும் அண்ணாமலையுடன் எதுவும் பேசவில்லை. அ.ம.மு.க., கூட்டணி தொடர்பான அறிவிப்பு வரும், ஜன., மாதம் தான் தெரிவிப்போம். அதுவரை பொறுமையாக இருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

