/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
6 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை
/
6 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை
ADDED : ஆக 25, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் யூனியன், கூத்தம்பூண்டி மற்றும் இழுப்புலி பஞ்.,க்கு இடையில் அமைந்துள்ள கோட்டையங்காடு, நரியன்காடு, செல்லாண்டிகாடு உள்ளிட்ட பகுதிகளில், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 200க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில், கடந்த, ஆறு மாதங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வேறுவழியின்றி, மளிகை கடைகளில் விற்கப்படும் மினரல் வாட்டர்களை அதிக காசு கொடுத்து பயன்படுத்தி வரும் அவலநிலை நீடித்து வருகிறது. எனவே, இப்பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.