/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி; மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு
/
உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி; மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு
உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி; மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு
உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி; மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு
ADDED : ஏப் 21, 2025 07:38 AM
நாமக்கல்: 'உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி முகாம், 21 நாட்கள் நடக்கிறது. விருப்பம் உள்ள மாணவ, மாணவியர் பங்கேற்று பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி முகாம், 21 நாட்கள் நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து, தடகளம், கால்பந்து, கபடி, வாள் விளையாட்டு மற்றும் இறகுப்பந்து விளையாட்டுகளை, வரும், 25 முதல், மே, 15 வரை, கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. அதில், 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொள்ளலாம். கோடைகால பயிற்சி முகாம், காலை, 6:00 முதல், 8:00 மணி வரையிலும், மாலை, 4:30 முதல், 6:30 வரையிலும் நடத்தப்படும்.
அதற்கு பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். மேலும், இப்பயிற்சி முகாமில், கலந்து கொள்பவர்கள் முன் பதிவு செய்ய அல்லது விபரங்களை அறிந்துகொள்ள, 8220310446 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.