/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீடு, கட்டடம், வீட்டுமனைகள் 'அப்ரூவல்' பெற கட்டணம் அறிவிப்பு
/
வீடு, கட்டடம், வீட்டுமனைகள் 'அப்ரூவல்' பெற கட்டணம் அறிவிப்பு
வீடு, கட்டடம், வீட்டுமனைகள் 'அப்ரூவல்' பெற கட்டணம் அறிவிப்பு
வீடு, கட்டடம், வீட்டுமனைகள் 'அப்ரூவல்' பெற கட்டணம் அறிவிப்பு
ADDED : டிச 28, 2024 02:14 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள வீடுகள், கட்ட-டங்கள், வீட்டுமனைகள், 'ஆன்லைன்' மூலம் பிளான் அப்ரூவல் பெற கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட செய்திக்கு-றிப்பு:
நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஊரக பகுதிகளில் மனைப்பிரிவுக-ளுக்கான அனுமதி மற்றும் கட்டட வரைபட அனுமதி ஆகிய-வற்றை எளிதில் பெறும் வகையில், சுய சான்றளிப்பு தொகுதியின் கீழ் ஆன்லைன் பிபிஏ.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட்டில், பொதுமக்கள் ஒற்றை சாளர முறையில், கட்டட வரைபட அனு-மதி பெற்றுக்கொள்ள ஊரக வளர்ச்சித்துறை மூலம் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அதில் கட்டட வரைபட அனு-மதி ஒப்புதல் கட்டணங்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்-ளது.
அதன் விபரம் வருமாறு:
நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம பஞ்சாயத்துகளான, எலச்சிப்பா-ளையம் ஊராட்சி ஒன்றியம் மண்டகப்பாளையம் பஞ்சாயத்து, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ரெட்டிப்பட்டி பஞ்சாயத்து, மோகனுார் ஒன்றியம் லத்துவாடி, புதுச்சத்திரம் ஒன்றியம் பாப்பி-நாய்க்கன்பட்டி, செல்லப்பம்பட்டி, திருச்செங்கோடு ஒன்றியம் ஆண்டிப்பாளையம், அணிமூர், தேவனாங்குறிச்சி, கருவேப்பம்-பட்டி, ஓ.ராஜபாளையம், புதுப்புளியம்பட்டி, சிறுமொளசி, டி.கைலாசம்பாளையம், வரகூராம்பட்டி, வெண்ணந்துார் ஒன்-றியம் கட்டனாச்சம்பட்டி, ஆர்.புதுப்பாளையம் ஆகிய பகுதி-களில் கட்டட வரைபட அனுமதிக்கு, ஒரு சதுரடியின் மதிப்பு, 25 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இது தவிர மாவட்-டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கு ஒரு சதுர-டியின் மதிப்பு, 15 ரூபாய்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, 2,500 சதுர அடிக்கும் குறைவான நிலப்பரப்பு மற்றும் 3,500 சதுர அடி வரை கட்டப்பட்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு சுய சான்றிதழின் அடிப்படையிலான கட்டட வரைபட அனுமதி செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, சுயசான்று மூலம் பொது-மக்கள் பயன்பெறலாம். ஒற்றைசாளர முறை மூலம், 2,500 சதுர அடிக்கு மேற்பட்ட மனை அல்லது 3,500 சதுர அடிக்கு அதிக-மான கட்டுமான அளவுள்ள வகைகளுக்கு பல்வேறு பிரிவு-களின் வளர்ச்சிக்கான ஒரே கட்டணமாக கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கு கீழ்கண்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்-ளது. 2,500 அல்லது 3,500 சதுரடிக்கு மேல் கட்டப்படும் கட்ட-டங்களுக்கு, 'ஏ' டைப் ஒரு சதுரடி ரூபாய், 27, 'பி' டைப், 25, 'சி' டைப், 22, 'டி' டைப், 15. வணிக கட்டடங்களுக்கு குடியி-ருப்புகளுக்கான கட்டடங்களை விட, 20 சதவீதம் அதிகம் நிர்ண-யிக்கப்பட்டுள்ளது.
'ஏ' டைப் ஒரு சதுரடி, 32, 'பி' டைப், 30, 'சி' டைப், 26, 'டி' டைப், 18. ஆஸ்பத்திரிகள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட தொழில்துறை நிறுவன கட்டடங்களுக்கு குடியிருப்பு-களை விட, 60 சதவீதம் கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்-பட்டுள்ளது. 'ஏ' டைப் ஒரு சதுரடி ரூபாய் 43, 'பி' டைப், 40, 'சி' டைப், 35, 'டி' டைப், 24.
குடியிருப்பு மனைப்பிரிவு களுக்கான அனுமதி கட்டணம், 'ஏ' டைப் ஒரு சதுரடி, 4-5, 'பி' டைப், 3-4, 'சி' டைப் , 2-3, 'டி' டைப், 1-2 ரூபாய்; தொழில்துறை மனைப்பிரிவுகளுக்கான அனு-மதி கட்டணம், 'ஏ' டைப் ஒரு சதுரடி, 6-7.50, 'பி' டைப், 45.0-6, 'சி' டைப், 3-4.50, 'டி' டைப், 15.0-3 ரூபாய். ஒரு மனைக்கான ஒப்புதல் கட்டணம், 10,000 ரூபாய் ஆகும். மேற்காணும் விபரங்-களின் படி பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து விரைவாக வரைபட அனுமதி பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.