/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சமையல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு
/
சமையல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு
ADDED : செப் 24, 2024 01:28 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் சமையல் காஸ் பயன்படுத்தும் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் சமையல் காஸ் நிறுவன மேலாளர்கள், காஸ் ஏஜன்ட்கள், வினியோகஸ்தர்கள், சமையல் காஸ் நுகர்வோர், தன்னார்வலர்கள் ஆகியோருடன், சமையல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வரும், 27 மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது.
டி.ஆர்.ஓ., சுமன் தலைமை வகித்து, சமையல் காஸ் நுகர்வோரின் குறைகளை கேட்டறிகிறார். சமையல் காஸ் வினியோகம் தொடர்-பான குறைபாடுகள், கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் நுகர்வோர், கூட்டத்தில்
கலந்துகொண்டு, கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.* அதேபோல், நுகர்வோர்களின் நலன் கருதி அனைத்து துறையின் முதல்நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன் காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர்
அலுவலக கூட்டரங்கில், வரும், 30 மாலை, 4:30 மணிக்கு நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.