ADDED : டிச 27, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், டிச. 27--
நா.த.க., நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக பாண்டமங்கலத்தை சேர்ந்த சக்திவேல், 42, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பாண்டமங்கலத்தில் கலந்தாய்வு கூட்டம், நேற்று நடந்தது. நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சக்திவேல், நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நன்றி தெரிவித்தார்.

