தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மாற்றுத்திறன் மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி


ADDED : நவ 30, 2025 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 02:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் யூனியன், மாணிக்கம்பாளையம் மேட்டுபுதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நேற்று, மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட, 'எண்ணும், எழுத்தும்' புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டது.

பள்ளியில், மூன்றாம் வகுப்பில் பயிலும் லக்சன்யா என்ற மாணவி, மூளை முடக்குவாதத்தால் பாதிப்படைந்துள்ளார். இவ-ருக்கு, தலைமை ஆசிரியர் பழனியப்பன், 'எண்ணும், எழுத்தும்' புத்தகம் வழங்கினார். மாற்றியமைக்கப்பட்ட, 'எண்ணும், எழுத்தும்' புத்தகம் கற்பிக்கும் முறைகள் குறித்து சிறப்பு பயற்-றுநர் பெரியசாமி விளக்கினார். மேலும், மாணவிக்கு, மாற்றுத்-திறன் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அரசு சலுகைகள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் போக்குவரத்து பயணப்படி, பெண் கல்வி ஊக்கத்தொகை, மாற்றுத்திறனாளி கல்வி உதவித்-தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இயன்முறை பயற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us