/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
4,000க்கும் மேற்பட்ட காலி பணியிடத்தை நிரப்பக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 12, 2025 01:23 AM
நாமக்கல், தமிழகத்தில் காலியாக உள்ள, 4,000க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை நிரப்பக்கோரி, அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின், மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில இணை செயலாளர் வைரம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சவுந்தரம் முன்னிலை வகித்தார். அதில், தமிழகத்தில் காலியாக உள்ள, 4,000க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை, உரிய பயிற்சி பெற்றவர்களை கொண்டு நிரப்ப வேண்டும். மகப்பேறு மற்றும் சிசு மரணங்கள் நிகழ்வதை தடுக்க முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை சமூக நலத்துறைக்கு மாற்ற வேண்டும்.
தட்டுப்பாடு நிலவும் மஞ்சள் காமாலை தடுப்பூசி மருந்தை அதிகளவில் கொள்முதல் செய்ய வேண்டும். தற்போது தடுப்பூசி மருந்துகள் தேவை அதிகரித்துள்ளது. எனவே, அனைத்து தடுப்பூசி மருந்துகளையும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யவும், செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவில் தடுப்பூசி உற்பத்தி துவங்க, மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட, எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர, கிராமப்புற செவிலியர்கள் கலந்து கொண்டனர்.