ADDED : ஜூலை 31, 2026 05:11 AM
நாமக்கல்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர்
கோமதி தலைமை வகித்தார். அதில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி
பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காலை உணவு திட்டத்தை
சத்துணவு திட்டத்துடன் இணைத்திட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை
முழுமையாக அமல்படுத்த வேண்டும். பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு
வழங்க வேண்டும். ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் அநாகரீகமாக பேசுவதை
நிறுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
எழுப்பினர்.
மாவட்ட செயலாளர் சாந்தி, பொருளாளர் ரம்யாதேவி,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தனசேகர், செயலாளர்
இளங்கோவன், பொருளாளர் தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர்.
