/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'கண்காணிப்பாளர், நுண்பார்வையாளர் நேர்மையாக பணியாற்ற வேண்டும்'
/
'கண்காணிப்பாளர், நுண்பார்வையாளர் நேர்மையாக பணியாற்ற வேண்டும்'
'கண்காணிப்பாளர், நுண்பார்வையாளர் நேர்மையாக பணியாற்ற வேண்டும்'
'கண்காணிப்பாளர், நுண்பார்வையாளர் நேர்மையாக பணியாற்ற வேண்டும்'
ADDED : மார் 21, 2024 02:22 AM
நாமக்கல், ''அனைத்து குழுக்களும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை நடுநிலையோடும், நேர்மையாகவும் பணியாற்ற வேண்டும்,'' என, தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜூன் பேனர்ஜி அறிவுறுத்தினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா தேர்தல் குறித்து உதவி தேர்தல் செலவின பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தலைமை வகித்தார். தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜூன் பேனர்ஜி, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில், முதற்கட்டமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள, 6 உதவி செலவின கண்காணிப்பாளர்கள், 174 நுண்பார்வையாளர்கள், 12 உறுப்பினர்கள் கொண்ட கணக்கியல் குழுவினர், 6 உறுப்பினர்கள் (6 வீடியோகிராபர் உடன்) கொண்ட வீடியோ சர்வைலைன்ஸ் குழுவினர், 18 உறுப்பினர்கள் கொண்ட வீடியோ கண்காணிப்பு குழுவினர் ஆகியோர் பங்கேற்றனர்.
'தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளை மேற்கண்ட குழுக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். அனைத்து குழுக்களும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை எவ்வித தொய்வும் இன்றி நடுநிலையோடும், நேர்மையாகவும் பணியாற்ற வேண்டும்' என, தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜூன் பேனர்ஜி அறிவுறுத்தினார். முன்னதாக, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மையம் மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை செலவின பார்வையாளர் பார்வையிட்டார்.
டி.ஆர்.ஓ., சுமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

